சசிகலா

சசிகலாவுக்கு 6 ஆண்டுகள் சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் அளித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.தமிழக அரசியலில் கடந்த மூன்று வாரங்களாக நடந்த நிகழ்வுகள் எந்த ஒரு வணிக சினிமாவுக்கும் கொஞ்சமும் சளைத்தது இல்லை. OPS முதல்வராக பதவியேற்றது, ராஜினாமா செய்தது, பின் ஜெயலலிதா  சமாதியில் தியானம், சசிகலாவுக்கு எதிராக கிளம்பியது, தொடர்ந்து MLAகள் கடத்தல், அவர்களின் குத்து டான்ஸ், மாறு வேடத்தில் தப்பித்தல், கடைசியில் எதிர்பார்த்த உச்ச நீதி மன்ற தீர்ப்பு.இத்தோடு முடிந்தது […]

நூறு வருட சினிமா

2014இல் வெளியான Boyhood எனும் திரைப்படத்தை 12 வருடங்களாக 2002இல் ஆரம்பித்து 2013 வரை எடுத்திருக்கிறார்கள் .ப்ரொடக்ஷன் பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை . திட்டமிட்டே தான் எடுத்து இருக்கிறார்கள்.கதை அப்படி . ஒருவனின் 6 வயது முதல் 18 வரை நடக்கும் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவன் வளர்ச்சி மாற்றத்தை கூறும் கதை என்பதால் , அதே நடிகர்களை வைத்து அவ்வப்போதாக 12 ஆண்டுகள் படம் பிடித்துள்ளனர் . டாகுமெண்டரி  எல்லாம் இல்லை. Fiction தான். […]

ஜல்லிக்கட்டு – எதிர்வினை

இந்தக்கட்டுரை ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான ஒரு கேள்விக்கு பதில் எழுதும் விதமாக எழுதியது.ஆனால் அவரது தளத்தில் வெளியாகவில்லை. கேள்வியை படிக்க :: ஜல்லிக்கட்டும் மரபும் – கண்ணன் திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டு பற்றி திரு .கண்ணன் எழுதியதை படித்தேன்.அதை பற்றி எனது சில எண்ணங்களை கூற விரும்புகிறேன். உண்மையில் என்னைப்பொறுத்தவரை ஜல்லிக்கட்டு பற்றி அறிவுபூர்வமான விவாதம் நடக்கவே இல்லை என்பதே உண்மை. எல்லாருக்குமே கேள்விகள் இருக்கின்றன.எனக்கும் தான்.ஜல்லிக்கட்டு விஷயத்தில் முக்கிய பங்காற்றிய அமைப்பு PETA.அவர்களின் […]

கோக், பெப்சி விற்பனை சாத்தியம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், நதிநீரை சுரண்டுவதை எதிர்த்தும் மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக்,பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கம் முடிவெடுத்துள்ளது.நல்ல முடிவுதான். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.இதுவரை இந்த முடிவுக்கு எதிராக கோக்,பெப்சி நிறுவனங்களில் இருந்து எந்தவொரு தீவிர எதிர் வினையும் வரவில்லை.இதனால் அந்த நிறுவனங்களுக்கு மொத்தமாக வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.போனால் போகட்டும் என்று விட்டு விடுவார்களா என்ன?இந்நேரம் […]