நோட்ஸ் – ஜெயமோகனின் வெள்ளையானை நாவலை முன்வைத்து

வெள்ளையானை, 1876-78களில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட தாதுவருடப்பஞ்சத்தின் போது சென்னை மாகாணத்தின் ஐஸ் ஹவுசில் நடந்த இந்தியாவின் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். பஞ்சங்கள் மீண்டும் மீண்டும் இந்தியாவில் நிகழ்ந்தே வந்தன. ஆனால் இங்கே லட்சக்கணக்கில் மக்கள் பஞ்சங்களில் செத்த வரலாறு இல்லை. 1870கள் பஞ்சத்தால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தழிந்த காலம். இதற்கு காரணம் இந்தியாவில் போடப்பட்ட ரயில்பாதைகள் தான். அந்த ரயில்கள் அனைத்துமே மைய நிலங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பதற்காகப் போடப்பட்டவை. அவற்றின் வழியாக இந்தியாவின் […]