வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-6

இன்று Izmailovsky மார்க்கெட் செல்வதாக திட்டம். எப்படியும் மதியம் 12 மணிக்குத்தான் அறையை காலிசெய்ய வேண்டும். காலை 11 மணிக்கு தான் மார்க்கெட் திறக்கும். அதனால் ஒரு 10.30க்கு அங்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று காலையிலே சீக்கிரமாக எழுந்து கிளம்பினேன. வரவேற்பறையில் இப்போது அந்த கோமட்டிப்பயல் உட்கார்ந்திருந்தான். அவனிடம் சென்று விசா ரெஜிஸ்டர் பற்றி விசாரித்தேன். அவனும் தேடித் பார்த்து விட்டு செய்யவில்லை என்றான். சரி இன்று செய்து தர முடியுமா? என்று கேட்டேன். எப்பொழுது […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-5

மறுநாள் லெனின் உடலைப் பார்க்க மீண்டும் செஞ்சதுக்கம் செல்ல வேண்டும். சரியாக திட்டமிடாததால் மீண்டும் மீண்டும் செஞ்சதுக்கம். ஆனால் செஞ்சதுக்கத்தில் இருப்பது ஏனோ மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. பொதுவாக பயணம் சென்று வந்த பிறகு எல்லோரும் கேட்பார்கள் அங்கு என்ன இருக்கிறது என்ன பேமஸ் என்று. நான் பொதுவாக அங்கு இருக்கும் சுற்றுலா தளங்களை பற்றி சொல்வேன். ஆனால் உண்மையில் எனக்கு வெளி இடங்களில், வேறு பண்பாடு உடைய இடங்களில்  முக்கியமாக வெளிநாடுகளில் வெறுமனையாக இருப்பதே சந்தோஷம்தான். […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-4

மறுநாள் க்ரெம்ளினில் Armour chamber மியூசியம் பார்க்க முடிவு செய்திருந்தேன்.லெனின் சமாதிக்கு சென்று அவர் உடலையும் பார்த்துவிடலாம் என்று நினைத்தால் திங்கட்கிழமை விடுமுறையாம்.அடுத்த நாள் தான் பார்க்கமுடியும்.காலை எழுந்து கிளம்பி நேராக மெக் டி சென்று பழைய ரசீதை காண்பித்து பர்கர் காபி வாங்கி சாப்பிட்டுவிட்டு மெட்ரோ பிடித்து மீண்டும் கிரெம்லின் சென்றுவிட்டேன்.இன்று திங்கட்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.சிறிது நேரம் பூங்காவிலும் செஞ்சதுக்கத்திலும் சுற்றி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு Armour chamber அனுமதிச்சீட்டு வாங்கும் நீண்ட […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -3

காலை எழுந்ததே எட்டரை மணிக்குத்தான்.அறையில் வேறு யாரும் இல்லை. வெளியே கிளம்பி சென்றிருந்தார்கள்.ஹாஸ்டெலிலேயே காலை உணவுக்கு ஆர்டர் செய்திருந்தேன்.ஓட்ஸ் கஞ்சியும்,பிரெட்டும், ஜூசும் வைத்திருந்தார்கள். குளித்து சாப்பிட்டுவிட்டு கிளம்பி விட்டேன்.கிரெம்லின் மற்றும் செஞ்சதுக்கத்தை(Red Square) பார்ப்பதுதான் திட்டம்.மெட்ரோ ரயிலில் ஐந்து நிமிடத்தில் போய் சேர்ந்து விட்டேன். மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைந்தவுடன் எனது பையை சோதனை செய்தார்கள்.2010இல் இரு மாஸ்கோ மெட்ரோ ஸ்டேஷனில் குண்டு வெடித்து 40பேர் இருந்திருக்கிறார்கள் 100பேர் காயம்பட்டிருக்கிறார்கள். இந்த வருடம் 2017 மார்ச்சில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-2

அங்கு நின்று கொண்டிருந்த இளவயது ரஷ்யர் என்னிடம் நல்ல ஆங்கிலத்தில் “Are you looking for something?” என்று கேட்டார்.”ஆம் .Fasol Hostel” என்று கையில் வைத்திருந்த விலாசத்தை காண்பித்தேன்.அதை தனது மொபைலில் கூகுள் மேப்பில் தேடி விட்டு “ஆம் இங்கு தான் இருக்கிறது” என்று கேள்வி பாவத்துடன் சொல்லிவிட்டு அவரும் முன்னும் பின்னும் சென்று எனக்காக  தேடிக் கொண்டிருந்தார். “இந்தியன்?” என்று கேட்டார்.”ஆம்” என்றேன். இறுதியில் ஹாஸ்டெலை கண்டுபிடித்துவிட்டார். ஹாஸ்டல் அங்கு இருந்த ஒரு கட்டிடத்தின் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -1

அடுத்து பயணத்திற்கு எங்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு பெரும்பாலும் திடீரென்று தற்செயலாகவே அகப்படுகிறது.அப்படிதான்  ரஷ்யப்பயணமும்.ஒரு நாள் தற்செயலாக ரஷ்ய பணத்தின் மதிப்பை எதற்கோ தேடப்போய் அது கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பிற்கே இணையாக இருந்து பின் விமான பயணத்திற்கான செலவு, விசா போன்றவற்றை தேடி எல்லாம் நமக்கு சாதமாக இருக்க சரி போகலாம் என்று முடிவு செய்தேன்.விசாவுக்கு ரஷ்யாவிலிருந்து ஒரு இன்விடேஷன் வாங்க வேண்டும்.அதையும் ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம். விமானச்சீட்டு, ரஷ்யாவில் தங்க ஹோட்டல் முன்பதிவு  […]